Home /News /tamil-nadu /

நீலகிரியில் பள்ளி மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் 22 பேருக்கு கொரோனா!

நீலகிரியில் பள்ளி மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் 22 பேருக்கு கொரோனா!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

நீலகிரியில் பள்ளி மாணவிகள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குன்னூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த, பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூரில் CMS என்ற தனியார் மகளிர் விடுதி இயங்கி வருகிறது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்த சிறுமிகள் சிலருக்கு அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 7 பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

    தகவல் அறிந்து அங்கு விரைந்த சுகாதாரத்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் இணைந்து அந்த வளாகத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விடுதி பணியாளர் ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டதை அடுத்து அந்த வளாகத்தில் தங்கியிருந்த 114 மாணவிகள் மற்றும் 5 பணியாளர்களுக்கும் அடுத்தகட்டமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    Also read: கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு படையினர் 190 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி