Live Updates | ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழப்பு

Coonoor Chopper Crash LIVE News Updates: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தனர்.

  • News18 Tamil
  • | December 08, 2021, 18:31 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    18:21 (IST)

    ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தும், அவரின் மனைவியும் உயிரிழப்பு

    18:16 (IST)
    16:55 (IST)
    16:50 (IST)

    ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

    16:43 (IST)

    முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.- கமல்ஹாசன்

    16:19 (IST)

    ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளார்.

    16:13 (IST)

    கோவை சூலூர் விமானப்படை தளத்திலும் இருந்து ஒரு மருத்துவக்குழு  குன்னூர் சென்றது. கோவை அரசு மருத்துவமனையிலிருந்து 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சென்றுள்ளது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில்  ஒரு மருத்துவ குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது

    16:12 (IST)

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து நேரடி காட்சிகள்.... வீடியோ

    16:7 (IST)
    குன்னூர் ராணுவ விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்..?
    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்தனர். விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஹெலிகாப்டர் விழுந்ததில் அதில் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர்  பலியானதாக தெரிவிக்கப்பட்டது.