• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக - கர்நாடக எல்லையில் நெகட்டிவ் சான்று இல்லையென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை!

தமிழக - கர்நாடக எல்லையில் நெகட்டிவ் சான்று இல்லையென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை!

நீலகிரி சோதனைச்சாவடி

நீலகிரி சோதனைச்சாவடி

தமிழக- கர்நாடக எல்லையில் வாகனம் மூலம் சுகாதாரத்துறையினர் கர்நாடகா சென்று வரும் தமிழக பயணிகளுக்கு கட்டாய RTPCR பரிசோதனை. கர்நாடகவில?

  • Share this:
    தமிழக - கர்நாடக எல்லையில் வாகனங்கள் மூலம் கர்நாடகா சென்று வரும் தமிழக பயணிகளுக்கு கட்டாய RTPCR பரிசோதனையை சுகாதாரத்துறையினர்  செய்து வருகிறார்கள். கர்நாடகவில் இருந்து வருபவர்களுக்கு  RTPCR பரிசோதனை நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளன. குறிப்பாக கேரள மாநிலம் சென்று வர ஆறு சோதனை சாவடிகள் மற்றும் கர்நாடக மாநிலம் சென்று வர கக்கநல்லா பகுதியில் ஒரு சோதனைச்சாவடியும் உள்ளது.

    Also Read: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் – நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

    இந்த இரு மாநில எல்லைகள் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் தமிழக பகுதிக்கு வந்து செல்கின்றன.  தமிழக எல்லைகளில் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய RTPCR பரிசோதனை சான்று மற்றும், இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து. அதன்படி எல்லைகளில் காவல் துறையினர், வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர், வனத் துறையினர் என 4 அரசுத் துறையினர் தீவிர  ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழக - கர்நாடக எல்லை


    இந்த நிலையில் அண்டை மநிலங்களில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக-கர்நாடக எல்லையில் வாகனம் மூலம் சுகாதாரத் துறையினர் தமிழகத்தில் இருந்து கர்நாடகா சென்று வரும் அனைத்து தமிழக பயணிகளுக்கும் கட்டாய தொற்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கட்டாய கொரோனா பரிசோதனை!


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மற்ற மாநிலங்கள் இருந்து வரும் பயணிகளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனையடுத்து சான்று இல்லாத சில வாகனங்கள் திருப்பி அனுப்படுகிறது.

    வில்லியம்ஸ், செய்தியாளர் - நீலகிரி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: