மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நகைச்சுவை நடிகர் மதுரை முத்து

மதுரை முத்து

மதுரையில் கொரோனா தடுப்பூசி மையத்தில் மதுரை முத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

  • Share this:
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அந்தவகையில் மதுரை அரசு மருத்துவமனை அருகில் உள்ள  மாநகராட்சி பள்ளியில் செயல்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், ‘கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுகிறது. கொரோனா 3-வது  அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அவரவர் குடும்ப நலனுக்காகவே அரசு அறிவுறுதலின் படி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற கூறினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: