இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

மழை

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்

 • Share this:
  தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகத்தின் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக   நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ( தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல், நாளை மற்றும் நாளை மறுநாள்,  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200: ஊராட்சி மன்ற தலைவரின் அறிவிப்பால் குவிந்த மக்கள்!


  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  கோவை மாவட்டம் வால்பாறையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பந்தலூர்  (நீலகிரி) 6, சின்கோனா  (கோவை) 5, சோலையாறு  (கோவை), தேவலா (நீலகிரி) தலா 4,  பெரியாறு   (தேனி),  நடுவட்டம்  (நீலகிரி) தலா  3,  எடப்பாடி  (சேலம்), அவலாஞ்சி  (நீலகிரி), தலா 2, சேலம்,  ஊத்துக்கோட்டை  (திருவள்ளூர்) தலா  1  சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

  இதையும் படிங்க: அநீதியான தேர்வை தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்- கமல்!


  வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்பதால், மன்னார் வளைகுடா பகுதிகளில்  மணிக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசகூடும் என்றும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: