ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குன்னூர் தேயிலை தோட்டத்தில் பலத்த வெடி சத்தத்துடன் பறந்து வந்த கார்... என்ன நடந்தது?

குன்னூர் தேயிலை தோட்டத்தில் பலத்த வெடி சத்தத்துடன் பறந்து வந்த கார்... என்ன நடந்தது?

குன்னூர் தேயிலை தோட்டத்தில் பலத்த வெடி சத்தத்துடன் பறந்து வந்த கார்

குன்னூர் தேயிலை தோட்டத்தில் பலத்த வெடி சத்தத்துடன் பறந்து வந்த கார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில்  பலத்த வெடி சத்தத்துடன் கார் ஓன்று  200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நீலகிரி  மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்பட படபிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ்,தெலுங்கு  திரைப்படங்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் சூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று  பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் தூரம் உயரத்திற்குச் சென்று பறந்து,வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்து உருண்டது.

Also Read : மாணவர் சேர்கைக்கு லஞ்சம்... கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

இதைப்பார்த்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சப்தம் கேட்ட பகுதியில் பொது மக்கள் கூடினர். பின்னர்தான் அந்த பகுதியில் சினிமா சூட்டிங் நடைபெற்று வருவதும், சண்டைக் காட்சிகளுக்காக கார் வெடிவைத்து தூக்கி வீசப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டதும்  தெரியவந்தது.

இதனைதொடர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது  வேகமாக பரவி வருகிறது.

First published:

Tags: Coonoor, Nilgiris