நீலகிரி மாவட்டம் தலைகுந்தா பகுதியில் உள்ள பகவான் கோவில் கதவை உடைத்து புகுந்த கரடிகள் அங்கிருந்த பூஜைப் பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் உதகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியை கொண்டதாகும். இதனால் அடிக்கடி காட்டெருமை ,சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கை. இந்நிலையில் நேற்று அதிகாலை உதகை அருகே உள்ள தலைகுந்தா பகவான் கோவிலின் கதவை உடைத்து 2 கரடிகள் புகுந்தன. அங்கிருந்த நெய்,எண்ணெய்,தேன்,வாழைப்பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சேதப்படுத்தியது. கரடிகளை பார்த்த தெருநாய்கள் வேறு பகுதிக்கு ஒடிவிட்டன. அதிகாலை வேளையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கரடிகள் கோவிலுக்குள் வந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில முன்பும் இதே போல கரடிகள் வந்து சென்ற நிலையில். தற்போது இரண்டாவது முறையாக அதே கோவிலுக்குள் கரடிகள் வந்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அடிக்கடி தலைக்குந்தா பகுதிக்கு வரும் கரடிகளை , வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.