நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார். மாணவி பெட்போர்டு சாலை அருகில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் மாணவியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி வலி தாங்க முடியாமல் துடித்து கதறியுள்ளார். படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற ஆசிக் என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.26 வயதான ஆசிக் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Also Read :
மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவன் - சிக்கியது எப்படி?
குன்னூர் நகர் பகுதியில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.