• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 7 வயது சிறுவன் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்ட விவகாரம்: இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

7 வயது சிறுவன் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்ட விவகாரம்: இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலின் பூசாரியாக 7 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவனது கல்வி தடைபெறுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது என நீலகிரி கல்வி துறை அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்த நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    அந்த கோயிலுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி கல்வித் துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக 5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களைப் பூசாரியாக நியமித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வழிவிடாத அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய கார் உரிமையாளர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!


    பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது என்றும், சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு இந்த சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: