பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி!
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி!
உதகை மலர் கண்காட்சி
நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும்.கொரொனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது.
உதகை அரசு ரோஜா பூங்காவில் 17 வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது. 89,000 ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது.
இன்றும் நாளையும் என இரு நாட்கள் நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சியில் 89 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்கார சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 41 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு கொண்டு மரத்தின் மேல் வீடு, 9000 ரோஜாக்களை கொண்டு படச்சுருள், 6,000 ரோஜாக்களை கொண்டு குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் சித்திரங்களான மோட்டு , பட்லு, 5000 ரோஜாக்களால் பியானோ ஆகியவையும் , உதகை தோன்றி 200 ஆண்டுகளானதை நினைவு கூறும் வகையில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட 00TY 200 ஆகிய அலங்கார வடிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அலங்கார சித்திரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் லட்சக்கணக்கான ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.