Home /News /tamil-nadu /

ஆளுநரை நெறி படுத்துகின்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின் - ஆ.ராசா

ஆளுநரை நெறி படுத்துகின்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின் - ஆ.ராசா

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா

உதகை 200 துவக்க விழாவில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசினார். உதகை 200 விழாவை நடத்தி மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தவுடன் 10 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியதாக தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
ஆளுநரை நெறி படுத்துகின்ற முதலமைச்சராக, ஆளுநர்  செய்யவேண்டிய கடமைகளை உணர்த்துகின்ற  முதலமைச்சராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

உதகை 200 துவக்க விழாவில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசினார். உதகை 200 விழாவை நடத்தி மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தவுடன் 10 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியதாக தெரிவித்தார்.

எல்லை கடந்த மனித நேயமிக்கவர் ஜான் சலீவன் என தெரிவித்த அவர், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய கால்டுவெல் எழுதிய ஒரு கட்டுரையில் , நீலகிரி வசிக்கும்  பழங்குடியினர்கள் தொல் திராவிடர்கள் என தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் முதல்வர், திராவிடர்களின் மூத்தவர்களான தொல் திராவிடர்களின் விழாவை துவங்க வைப்பது பெருமைக்குரிய விடயம் என தெரிவித்தார்.

பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்பட்ட பிரிட்டிஷார் என்ற புத்தகத்தில் ஜான்சலிவனின் பெயரும் இருக்கின்றது என தெரிவித்த அவர், 1921 ம் ஆண்டு உதகை 100வது ஆண்டு விழாவில் இந்திய வைஸ்ரயாக இருந்த  வெலிங்டன், ஜான்சலிவனை பாராட்டுகின்றேன் வணங்குகின்றேன் என தெரிவித்த பின், எனக்கு பின் 200வது ஆண்டு விழா நடைபெறும், அந்த  விழாவில் ஒரு கவர்னர் பங்கேற்பார் எனவும் அப்போது நானும், என்மனைவியும் விண்ணுலகில் இருந்து வாழ்த்துவோம் என வெலிங்டன்  தெரிவித்தார் எனவும், இப்பொது ஆளுநர் இல்லை, ஆளுநர் ஆண்டகாலம் அது, இன்றைக்குஆளுநரை நெறி படுத்துகின்ற முதலமைச்சர் நமது முதலமைச்சர் எனவும் ஆளுநர்  செய்யவேண்டிய கடமை எல்லாம் உணர்த்துகின்ற  முதலமைச்சர் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்ணுலகில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட 200வது ஆண்டு விழாவில் வெலிங்டன் மற்றும் அவரது மனைவியின் வாழ்த்துகள் அவர்கள் விரும்பியபடி, முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

Also read... நீலகிரியில் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தீராத பிரச்சினையாக பிரிவு 17,  டேன் டீ  நஷ்டத்தில் இயங்குவது, 10 ஆயிரம் பேருக்கு மின்சாரம் இல்லாதது குறித்தும், அதை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வனத்துறை அமைச்சரும், நானும் சொன்ன போது, நானே தலைமை தாங்கி  அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

வாக்கு வங்கி அரசியலை கடந்து ஆட்சி நடத்துவது என்ற முறையை ஸ்டாலின் கையாள்வதாவும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்என ஆ.ராசா தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: A Raja, CM MK Stalin

அடுத்த செய்தி