Home /News /tamil-nadu /

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரித்த இருவர் கைது

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரித்த இருவர் கைது

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரித்த சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த சயத், பிரகாஷ் என்ற இருவரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரிப்பதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்நிலையில் மாஞ்சா நூல் தயாரித்த சென்னை பாலவாக்கம் மணிமேகலை தெருவை சேர்ந்த அப்துல் சயத் (51), பட்டம் விட்ட பிரகாஷ் (41) இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Also read... 93 வயதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் ராக்கம்மாள் பாட்டி - 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்தல்!

    பின்ன,ர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சென்னை வியாசார்பாடி பகுதியில் மாஞ்சா நூல் செய்வதற்கான பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து தயார் செய்ததும், கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் அதிகளவு தங்களது பொழுதுபோக்கை கழிக்க பட்டங்களை பறக்கவிட வாங்கும், ஆர்வம் அதிகம் வருவதால் இதன் ஆபத்தை அறியாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்களை தயாரித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.



    உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா தூல் தயாரித்தது தொடர்பாக சயத், பிரகாஷ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த நீலாங்கரை போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 47 பட்டங்கள், மாஞ்சா நூல் தயாரிக்கும் கருவி மற்றும் மாஞ்சா நூலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி