Home /News /tamil-nadu /

நீலகிரி மக்களவைத் தொகுதி

நீலகிரி மக்களவைத் தொகுதி

நீலகிரி

நீலகிரி

15-வது மக்களவைத் தேர்தலில் 70.79% பதிவான வாக்குகள் 16-வது மக்களவைத் தேர்தலில் 2.64% அதிகரித்து 73.43% எனப் பதிவாகி இருந்தன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இயற்கை வளங்கள் நிறைந்த நீலகிரி மக்களவைத் தொகுதி முதலாவது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 1957-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

அதிகபட்சமாக தேசிய கட்சியான காங்கிரஸ் நீலகிரி மக்களவைtஹ் தேர்தலில் 7 முறை வெற்றிப் பெற்றுள்ளது. பா.ஜ.க, தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 2 முறைகள் இந்தத் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.

இறுதியாக நடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியையும் அ.தி.மு.க தனது வசமாக மாற்றியது. அ.தி.மு.க வேட்பாளர் சி. கோபாலகிருஷ்ணன் 4,63,700 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா 3,58,760 வாக்குகள் பெற்றுத் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் கட்சியின் பி. காந்தி 37,702 வாக்குகள் பெற்று படு தோல்வியடைந்தார்.

15-வது மக்களவைத் தேர்தலில் 70.79% பதிவான வாக்குகள் 16-வது மக்களவைத் தேர்தலில் 2.64% அதிகரித்து 73.43% எனப் பதிவாகி இருந்தன.
Published by:Rahini M
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, Nilgiris S22p19, Tamil Nadu Lok Sabha Elections 2019, West Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி