சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையத்திற்கான தேர்வு அறிவிப்பில் காலியாக உள்ள தற்காலிக பணிக்கும் இந்தி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறூத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையான நிலையில், தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு தேர்வுகளின் வழியாக இந்தி திணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம் 11 மாத ஒப்பந்தத்தில் Assistant controller of examinations பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தகுதியாக, முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் பயிற்சி முடித்திருக்க வேண்டும் ஆகிய தகுதிகளோடு புரிந்துகொள்ளும் அளவுக்கு இந்தி மொழி அறிவும் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையத்திற்கான தேர்வு அறிவிப்பில் "புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு" வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. ஒரு காலியிடம், அதுவும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான பணி. இருந்தாலும் இந்தியை தகுதியாக்குகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் மாற்றம்: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு?
மேலும், இது அலுவல் மொழிசட்டத்தின் அப்பட்டமான மீறல் என கூறியுள்ள சு.வெங்கடேசன், இந்தி திணிப்பை கைவிட்டு, அந்த அறிவிப்பு உடனடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.