முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

சோதனையை கண்டித்து ஆர்பாட்டம்

சோதனையை கண்டித்து ஆர்பாட்டம்

இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை, கடலூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பணம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் அதிகாலையில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பயாஸ்அகமது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்ககு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசிப் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Also Read : மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

கோவை கரும்புக்கடை பகுதியில் PFI தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் காலை 5.30 மணி முதல் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையை கண்டித்து போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளாதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    இதேபோல் கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரு உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Karnataka, Kerala, NRI, Social Democratic Party of India (SDPI), Tamilnadu