முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை.. ரூ. 40 லட்சம் பறிமுதல்!

கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை.. ரூ. 40 லட்சம் பறிமுதல்!

என்.ஐ.ஏ சோதனை (கோப்பு படம்)

என்.ஐ.ஏ சோதனை (கோப்பு படம்)

கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக 40 இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், அதிக அளவிலான டிஜிட்டல் சாதனங்கள் உட்பட 40 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை மற்றும் மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.கோவையில் மட்டும் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று மங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் 8 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சுமார் 8 மணிநேரம் நடைபெற்ற சோதனையில், பெரும் அளவில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

First published:

Tags: Coimbatore, Mangalore, NIA