• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

கோப்புப்படம்

கோப்புப்படம்

மயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காலை முதலே சோதனை நடந்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நெல்லை, மதுரை, தேனி உள்பட 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களில் இரு மாநிலங்களிலும் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். கடந்த வாரம் சென்னை மண்னடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நாகப்பட்டிணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காலை முதலே சோதனை நடந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: