• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 10 மணி நேரம் நடந்த என்.ஐ.ஏ சோதனை - லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றிய அதிகாரிகள்

10 மணி நேரம் நடந்த என்.ஐ.ஏ சோதனை - லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றிய அதிகாரிகள்

கோவையில் நடந்த சோதனை

கோவையில் நடந்த சோதனை

டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் சைபர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.

    அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக, நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதே போல் அன்சாருல்லா அமைப்பைச் சேர்ந்த 14 பேர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

    ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தாக்குதல் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், தேனி, திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அகமது அசாருதீனின் வீட்டின் பூட்டை உடைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்த காரணத்தால், உறவினர்கள், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிட்டார். அப்போது, ஒரு ஐபோன், சிம் கார்டு, சிடிக்களை கைப்பற்றினர்.

    இதேபோல் நாகை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் வீட்டிலும், தேனி மாவட்டம் கோம்பையை சார்ந்த மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது.

    அனைத்து இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாகவும், சோதனையில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 3 மெமரி கார்டுகள், ஒரு ஹார்டிஸ்க், இரு பென்டிரைவ்கள், இணையதள உபகரணம் மற்றும் 9 சிடிக்கள் உள்ளிட்ட 50 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் சைபர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: