ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராமலிங்கம் கொலை வழக்கில் 2-வது நாளாக என்.ஐ.ஏ விசாரணை!

ராமலிங்கம் கொலை வழக்கில் 2-வது நாளாக என்.ஐ.ஏ விசாரணை!

சோதனை நடைபெறும் இடம்

சோதனை நடைபெறும் இடம்

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்ட அலுவலகத்திலும் மாவட்டச் செயலாளர் குத்தூஸ் வீட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கும்பகோணம் அருகே உள்ள மதமாற்றம் தொடர்பான பிரச்னையில் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எஸ்டிபிஐ.,  பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா  அலுவலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருபுவனத்தைச் சேர்ந்த பாமாக நிர்வாகி ராமலிங்கம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி மதமாற்ற பிரச்னையில் கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில், அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

  இந்நிலையில், திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில், அந்த அமைப்பின் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா காரைக்கால் மாவட்ட அலுவலகத்திலும் மாவட்டச் செயலாளர் குத்தூஸ் வீட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்று கும்பகோணம் மீன்மார்க்கெட்டில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகம் அதன் அருகில் உள்ள மசூதி, மேலகாவேரியில் உள்ள பள்ளிவாசலும் விசாரணை நடைபெறுகிறது.

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாசினுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருந்ததாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: NIA