கோவையில் ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையில் 7 செல்போன்கள் உள்பட முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை உக்கடத்தில் ஷனாபர் அலி, முகமது யாசீர், ஜி.எம். நகரில் உமர் பரூக், சதாம் உசேன், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முபீன் ஆகிய 5 பேரின் வீடுகளில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
கேரளாவில் இருந்து கோவை வந்த 5 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து நடத்திய சோதனையில், 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இவர்களில் முபீன் என்பவரை மட்டும் ரேஸ் கோர்ஸில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், 5 மணிநேரமாக நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.
இறுதியில், 5 பேரின் வீடுகளில் இருத்து 7 அரபு மொழி புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து உமர் பரூக், ஷனாபர் அலி, முபின், முகமது யாசிப், சதாம் உசேன் ஆகிய 5 பேரையும் நாளை கொச்சி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.