Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தேசிய புலனாய்வு பிரிவு (NIA) அதிகாரிகள் சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 8 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை மற்றும் மயிலாடுதுறையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் 8 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மயிலாடுதுறையில் 5 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை அருகே நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா உட்பட 5 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

First published:

Tags: ISIS, Mayiladuthurai, NIA