கோவை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வழக்கில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கைதிகளிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் 7 இடங்களில் சோதனை நடத்தினர்.
சோதனைக்குப் பிறகு, கோவையைச் சேர்ந்த அசாருதின் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இலங்கை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிம் உடன் அசாருதின் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
அசாருதினிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் அத்வானி வரும்போது பைப் குண்டு வைத்தது, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலை வழக்கில் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலை, ஆதரவு மற்றும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டவர்களின் பட்டியலை என்.ஐ.ஏ அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையிலும், என்ஐஏ டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையில் 4 அதிகாரிகள் புழல் சிறைக்குச் சென்று சுமார் நான்கு மணி நேரம் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தப்படும் என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also see... மக்களவையில் தமிழ் வாழ்க முழக்கமிட்ட தமிழக எம்.பி.க்கள்!
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.