சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : லாரி, கார் வாடகை உயரும் அபாயம்
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : லாரி, கார் வாடகை உயரும் அபாயம்
சுங்கச்சாவடி
Toll Booths : கயத்தாறு அருகே சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் நான்கு சக்கர வாகனங்கள் ஒரு முறை சுங்கச்சாவடியை கடக்க 105 ரூபாய் கட்டணம் இருந்து நிலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 115 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் திருநெல்வேலிதூத்துக்குடி மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகள் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகே சாலைப்புதூர் புதுக்கோட்டை மற்றும் புதூர் பாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நாங்குநேரி சுங்கச்சாவடியில் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு முறை சுங்கச்சாவடியை கடக்க 95 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கட்டணம் 105 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 7 ஆக்சில்களுக்கு அதிகமாக கொண்ட வாகனங்களுக்கு 60 ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளது. கயத்தாறு அருகே சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் நான்கு சக்கர வாகனங்கள் ஒரு முறை சுங்கச்சாவடியை கடக்க 105 ரூபாய் கட்டணம் இருந்து நிலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 115 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்கு 10 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதேபோல புதுக்கோட்டை சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக திருநெல்வேலியில் இருந்து மதுரை வரை சென்று வர 150 முதல் 275 ரூபாய் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகள் 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என மாற்றி அமைக்கப்படும் எனவும் முப்பத்தி இரண்டு சுங்கச்சாவடிகள் எடுக்கப்படுவததற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் அடுத்த மூன்று மாதங்களில் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில் இந்த சுங்க கட்டண உயர்வு மேலும் அவர்களை பாதிக்கும். லாரி மற்றும் வாடகை கார் ஆகியவற்றின் கட்டணங்களும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு என்றாலும் கூட அவசர நிலை காரணமாக வாடகைக்கார் எடுத்து செல்லும் நபர்களின் நிலை வாடகை உயர்வால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கட்டண உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என வாடகை கார் மற்றும் லாரி ஓட்டுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கயத்தாறு சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்குவதில் மட்டுமே குறியாக சுங்கச்சாவடி நிறுவனங்கள் செயல்படுகிறது கட்டண உயர்வு பாதிப்பு என்ற நிலையில் இதுபோன்று சுத்தமில்லாத கழிவறைகள் மேலும் நோய்த் தொற்று போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொது மக்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகளை முழுமையாக செய்து தராத இதுபோன்ற சுங்கச்சாவடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.