குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கோப்புப்படம்

அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றி, அறிவியல் முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாதவரம் தாலுகா, லட்சுமிபுரம், காந்தி தெருவில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அந்த செய்தியை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, லட்சுமிபுரம் காந்தி தெரு மற்றும் பெரம்பூர்- செங்குன்றம் சாலை சந்திப்பு ஆகிய பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர் வாரி, அவற்றுடன் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள், உலர்த்தி அகற்றுவதற்காக அப்பகுதிகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்து.

Also read... கோவை: குடிபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழப்பு!பின்னர் அவை அகற்றப்பட்டன. இனி இதுபோன்று புகார்கள் வராதவண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றி, அறிவியல் முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும். வரும் காலங்களில் குப்பைகள் அகற்றப்படாதது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சென்னைையில் குப்பைகளை அகற்றுவதில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். விதிமீறல்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது விதிமீல்கள் தொடர்பாக தங்கள் கவனத்துக்கு வந்தாலோ, தொடர்புடைய அதிகாரிகள் மீது சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Published by:Vinothini Aandisamy
First published: