ஈஷா மகாசிவராத்திரி விழாவுக்கு தடை கோரிய வழக்குகள் நிராகரிப்பு - தொடர்ந்து நடத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி

இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு அரசு துறைகள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஈஷா மகாசிவராத்திரி விழாவுக்கு தடை கோரிய வழக்குகள் நிராகரிப்பு - தொடர்ந்து நடத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி
ஈஷா யோகா மையம்
  • Share this:
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, ஈஷா மஹா சிவராத்திரியை நிரந்தராமாக தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. மேலும் வழக்கம் போல் உரிய துறைகளின் அனுமதியுடன் ஈஷா மகாசிவராத்திரி விழாவினை தொடரலாம் என்றும் கூறியுள்ளது.

மஹா சிவராத்திரி நடைபெறும் இடம் யானை வழித்தடம் எனவும், அதனால் இந்த விழாவினால் மனித விலங்கு மோதல் ஏற்படக் கூடும் என்று குறிப்பிட்டு விழாவிற்கு தடை கோரி மனுதாரர் வழக்கினை தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இந்த இரண்டு கூற்றுகளிலும் உண்மையில்லை என்று உறுதி செய்துள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகள் சமர்பித்து இருந்த ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த உத்தரவினை பசுமை தீர்ப்பாயம் வழங்கி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.


இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு அரசு துறைகள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல் ஈஷா அறக்கட்டளை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த எந்த பாடங்களும் தேவையில்லை என்றும் குறிபிட்டுள்ளது.

மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வாறு அரசு துறைகளின் அனுமதியோடு மஹாசிவராத்திரி விழா நடைபெற்றதோ, அவ்வாறே இனியும் ஈஷா விழாக்களை தொடரலாம் என்று கூறியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் அனுமதிக்க பட்ட ஒலி அளவுகளுக்குள் இந்த விழா நடைபெறுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

ஈஷா அறக்கட்டளை தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் விதிமீறல் மற்றும் யானை வழித்தடம் குறித்த அவதூறான செய்திகளை மறுத்து வந்துள்ளது. ஆனாலும் களைப் படைய செய்யும் வகையில் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இந்த அவதூறுகள் மீண்டும், மீண்டும் உலவி வந்தது. இதனாலேயே ஈஷா இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொது வெளியில் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியிட்டது.ஈஷா அறக்கட்டளை மிகப்பெரிய அளவிலான களத்தில் செயல்படுத்த கூடிய சுற்றுச்சூழல் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரங்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக ஐ.நா-வின் இரண்டு முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளான, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) ஈஷாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை அங்கீகரித்துள்ளது குறிபிடத்தக்கது.

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1.ஈஷா யோக மையம் வன நிலங்களை ஆக்கிரப்பு செய்யவில்லை.

2.மகாசிவராத்திரி விழா நடைபெறும் போது அந்தப் பகுதியில் மனித விலங்கு மோதல் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

3. யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோக மையம் அமையவில்லை.

4. ஈஷா யோக மைய கட்டிடங்கள் அங்கீகரிக்கப்பட்டு முழுமையான அனுமதிகளை பெற்றுள்ளது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading