‘கோவிட்-ஃப்ரீ’ கோவளத்தை உருவாக்க ஐடியா வகுத்த என்ஜிஓ! தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தில் மக்கள்!

வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் 7 வெற்றியாளர்களை தேர்வு செய்து பல்வேறு பரிசு பொருட்களை வழங்குகின்றனர்.

வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் 7 வெற்றியாளர்களை தேர்வு செய்து பல்வேறு பரிசு பொருட்களை வழங்குகின்றனர்.

 • Share this:
  ‘கோவிட்-ஃப்ரீ’ கோவளத்தை உருவாக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து எடுத்த முயற்சிகள் அப்பகுதி மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வைத்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தனது கோர முகத்தை காட்டிவரும் நிலையில், உயிர் பலிகளும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேர் வீதம் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.

  இதற்கிடையே, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க கொரோனா தடுப்பூசிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கோவளம் பகுதியை சேர்ந்த எஸ்.டி.எஸ். ஃபவுண்டேஷன் நிறுவனர் சுந்தரம் என்பவர் தாம் வசிக்கும் பகுதியை கொரோனா இல்லா பகுதியாக மாற்ற வேண்டும் என எண்ணி ‘கோவிட் இல்லா கோவளம்’ என்ற தலைப்பில் சி.என். ராமதாஸ் ஃபவுண்டேஷன் , சிராஜ் ஃபவுண்டேஷன் அகிய மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து தங்கள் பகுதி மக்களிடையே நாள்தோறும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கொரோனா பரவல் பற்றி எடுத்துரைத்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அதனால் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி தடுப்பூசி போட வைக்கின்றனர்.  மேலும், இதில் இருக்கும் சிறம்பம்சம் என்னவென்றால் இலவச தடுப்பூசி முகாம் அமைத்தால் தடுப்பூசி செலுத்த வருவோருக்கு கூப்பன் ஒன்றை வழங்கி அதனை பூர்த்தி செய்து, அதை அங்கிருக்கும் பெட்டி ஒன்றில் போட வைக்கின்றனர். வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் 7 வெற்றியாளர்களை தேர்வு செய்து பல்வேறு பரிசு பொருட்களை வழங்குகின்றனர். இலவச இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மொபைல் போன், பட்டுப்புடவை ஆகிய பரிசுகளை வழங்கி வருகின்றனர்.  இதனால் கோவளம் பகுதியில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்- வினோத்
  Published by:Archana R
  First published: