ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

NLC Boiler blast | என்.எல்.சி விபத்து - 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு

NLC Boiler blast | என்.எல்.சி விபத்து - 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு

விபத்து காட்சிகள்

விபத்து காட்சிகள்

Neyveli NLC Boiler Explosion | நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 7 அலகுகள் மூலம் ஆயிரத்து 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், இன்று காலை இரண்டாவது சுரங்கத்தில் அதிக கொதிகலன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  மேலும், 2வது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 22 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களில் பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


  படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை


  எஞ்சிய 17 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 7-ஆம் தேதி இதே அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், கொதிகலன்கள் பழுதடைந்து அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

  Published by:Sankar
  First published:

  Tags: Neyveli