நெய்வேலி என்எல்சி நிறுவனம் விரைவில் தனியார் கைக்கு செல்ல உள்ளதாகவும் அதற்காக 2,000 விளைநிலங்கள் கையகப்படுத்த முயற்சி நடப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய உரை இது. நிலக்கரியை விட தரம் குறைவான லிக்னைட்டை எடுப்பதற்காக நெய்வேலியில் 25,000 ஏக்கர் விளைநிலங்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும் அதற்கு 2 அமைச்சர்கள் ஆதரவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
"A" என்று தொடங்கும் தனியார் நிறுவனம் என்எல்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த விவசாய நிலங்களை கைப்பற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
என்எல்சி நிறுவனத்திற்காக நிலத்தை தாரை வார்த்தவர்களில் பலர் உரிய இழப்பீடு கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் தனியார் வசமாக போகிறது என்ற தகவலும் அதற்காகவே பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி என்ற தகவலும் நெய்வேலி சுற்றுவட்டார மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani, NLC, Pattali Makkal Katchi