ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

250 கோடி ரூபாய் செலவில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரை அமைப்புகள் நிறுவப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

  இதன்படி, கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும் என்றும், இதற்காக 15 கோடியே 42 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில், 250 கோடி ரூபாய் செலவில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரை அமைப்புகள் நிறுவப்படும் என்று கூறினார். விவசாயிகளுக்கு இலவசமாக 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

  கேங் மேன் பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Tasmac, TN Assembly