மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டம் சண்டிகரில் துவங்கி நடைபெற்றது. சண்டிகரில் நேற்றும், இன்றும் நடைபெற்ற கூட்டத்தல் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேப் போன்று பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘புது உலகைப் படைக்கும் பெண்கள்’... இலவசப் பேருந்து திட்டமும்… 131 கோடி பயணங்களும்… ஒரு பார்வை!
இந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரைலயில் நடைபெறும் அறிவித்தார். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மதுரையில் நடத்த வேண்டுனெ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெறும் என்று அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் அழைப்பை ஏற்று மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள் மற்றும மூத்த அதகாரிகளை கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.