தூய்மையை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பிரச்னைதான்: ஜக்கி வாசுதேவ்

ஜக்கி வாசுதேவ்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ‘நாம் தூய்மையைக் கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பிரச்னைதான்’ என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

  இதுதொடர்பாக, அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது உடல், வீடு, நம்மை சுற்றியுள்ள சூழ்நிலை ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விஷயத்தை அனைவரது மனதிலும் பதிய வைப்பதற்காக பிரதமர் மோடி தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.

  நமது நாட்டில் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், குளிக்காமல் யாரும் சாப்பிடுவதில்லை. உடலை, வீட்டை, சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது கலாசாரத்திலேயே ஊறியுள்ளது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டில் கழிவுநீர் வடிகால் வசதி இருந்துள்ளது. அப்போது வேறு எந்த நாட்டிலும் இந்த வசதி கிடையாது.

  தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தற்போது  அனைத்து மாநிலங்களிலும் அரசு செலவில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ரூ. 60 கோடி செலவில்  50 லட்சம்  கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் தூய்மையைக் கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பிரச்னைதான் என்றும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
  Published by:DS Gopinath
  First published: