• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தலில் வெற்றி பெற்றது யாரென்றே தெரியவில்லை... நாளை அடுத்த தேர்தல்...!

தேர்தலில் வெற்றி பெற்றது யாரென்றே தெரியவில்லை... நாளை அடுத்த தேர்தல்...!

ஓட்டு - மாதிரிப்படம்

ஓட்டு - மாதிரிப்படம்

ராதாபுரம் தொகுதியில் கடந்தமுறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் அடுத்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது.

  • Share this:
    ராதாபுரம் தொகுதியில் கடந்தமுறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் அடுத்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    வாக்கு எண்ணும் போது, 203 தபால் வாக்குகள் செல்லாது என, நிராகரிக்கப்பட்டன. இதற்கு, தபால் வாக்கு பதிவு செய்யும் வாக்காளர்களுக்கான உறுதிமொழி படிவத்தை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர், அட்டெஸ்டேடு செய்திருந்தனர். அவர்கள், கெஜட்டட் அதிகாரிகள் அல்ல என அதிகாரிகள் காரணம் கூறினர்.

    இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அட்டெஸ்டேடு செய்தது செல்லும். எனவே, தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளின், மூன்று சுற்று வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது, அதிமுக இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வாக்குகள் எண்ணி முடித்தாலும், முடிவை அறிவிக்கக்கூடாது என, நீதிபதிகள் தடை விதித்தனர்.

    இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அடுத்த தேர்தலே வந்து விட்டது. நாளை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்தத் தொகுதியில், அதே இரண்டு வேட்பாளர்கள் இப்போதும் களம் காண்கின்றனர்.

    இதேபோல, திருச்செந்துார் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Must Read :  கொரோனா பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது?

     

    இந்நிலையில், நாளை நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னரே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்லப்போவது யார் என்பது தெரியவரும். அதுவரையில் முடிவுக்காக காத்திருப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: