ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 4 நாட்களுக்கு மழை இல்லை.. வெப்பம் தான் இருக்கும் - வானிலை மையம்

அடுத்த 4 நாட்களுக்கு மழை இல்லை.. வெப்பம் தான் இருக்கும் - வானிலை மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

Weather update | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை எங்கும் பதிவு செய்யப்படவில்லை - வானிலை மையம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Tamil Nadu

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

30.12.2022: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

31.12.2022 முதல் 03.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heavy rain, Tamil Nadu, Weather News in Tamil