Home /News /tamil-nadu /

Happy New Year 2020 : புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் வழிபாடு

Happy New Year 2020 : புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் வழிபாடு

புத்தாண்டை ஒட்டி நள்ளிரவில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

புத்தாண்டை ஒட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சவேரியார் பேராலயம், கதீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகர வீதிகள் வண்ணவிளக்குகளால் ஜொலித்தன.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

சென்னை எண்ணூர் நெட்டுகுப்பத்தில் உள்ள சின்னஅம்மன் கோவிலில் 500 சேலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் புத்தாண்டை ஒட்டி நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.

காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்திலும் சிறப்பு பாடல்களை பாடி புத்தாண்டை வரவேற்றனர்.

திருத்தணி முருகன் கோயில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டன.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களிலும், தேவாலயங்களிலும் மக்கள் கூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

 
Published by:Yuvaraj V
First published:

Tags: New Year Celebration

அடுத்த செய்தி