சென்னை மக்களே... வெளிநாட்டு ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்

சென்னை சாலைகளில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மக்களே... வெளிநாட்டு ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்
புதிய சிக்னல் முறை
  • News18
  • Last Updated: August 14, 2020, 5:47 PM IST
  • Share this:
சென்னையில் தற்போது உள்ள சிக்னல் முறையில் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறிய அளவில் இருப்பதால் சிக்னல்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் நீண்ட தூரத்திலிருந்து வருபவர்களுக்கும் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாக இருந்தது. ஏற்கனவே இதை சரி செய்யும் விதமாக சாலைகளில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி சிக்னல் விளக்குகள் ஏற்றவாறு எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த சோதனை முயற்சி தோல்வி அடைந்தது.

தற்போது மெரினாவை நவீனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்னை காந்தி சிலை சிக்னலில் புதிய சிக்னல் முறையை போலீசார் திட்டமிடுள்ளனர்.  ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பதுபோல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல், அந்த சிக்னல் கம்பம் முழுவதும் எல்இடி விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார் போல் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது மக்களுக்கு எளிதாக தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை நிற சிக்னல் விழுந்தால் கோ GO என்ற அறிவிப்பு பலகை, ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் லிசன் LISTEN என்ற அறிவிப்பு பலகையும், சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் ஸ்டாப் STOP என்ற அறிவிப்பு பலகை ஒளிரும் வண்ணம் போடப்பட்டுள்ளது.


Also read... பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு

சிக்னல் எவ்வளவு நேரம் இருக்கும் என்ற கால அளவு எண்களும் சிக்னல் ஏற்றவாறு நிறத்தில் எரியும்.சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த புதிய சிக்னல் முறை காரணமாக விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தடுப்பதற்காகவும் சோதனை அடிப்படையில் போடப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களிடையே வரவேற்பு பெற்றால் தொடர்ந்து சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading