இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான நியூஸ் 18 குழுமத்தின் தமிழக பிரிவான நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் மாநகரில் "உணவு திருவிழா 2022" நிகழ்வானது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படுகின்றது.
சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில் இந்த உணவு திருவிழா ஜூன் 3 ம் தேதி முதல் ஜூன் 5 ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற இருக்கின்றது.
மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த " உணவு திருவிழா 2022" யை துவக்கி வைக்கின்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டல் குழுமத்தின் செயல் இயக்குனர் விவேக் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த உணவு திருவிழாவில் பல்வேறு பிரபல நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அரங்குகள் அமைத்து பாரம்பரிய உணவு வகைகள் , துரித உணவு வகைகள், சைவம், அசைவம் உணவு வகைகளில் பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்க இருக்கின்றனர். மேலும் உணவு திருவிழா நடைபெறும் மூன்று நாட்களும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், உணவு தொடர்பான குறிப்புகள், சிறுவர்களை உற்சாகப்படுத்தும் விதமான நிகழ்வுகள் நடத்தப்பட இருக்கின்றது.
பொழுது போக்குடன் மனதுக்கு பிடித்த விருப்ப உணவு வகைகளை ஓரே இடத்தில் உண்டு மகிழும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 ம் தேதி முதல் ஜூன் 5 ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடத்தப்பட இருப்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.