• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உடல் குறைப்பு டிப்ஸ்... கவரும் பேச்சு... அந்தரங்க படம் பெற்று மிரட்டல்...! சென்னையில் பெண்களை குறிவைத்து மோசடி

உடல் குறைப்பு டிப்ஸ்... கவரும் பேச்சு... அந்தரங்க படம் பெற்று மிரட்டல்...! சென்னையில் பெண்களை குறிவைத்து மோசடி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உடல் எடை குறைய குறிப்பு சொல்வது போல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களையும்,  வீடியோக்களையும் ஒரு கும்பல் பெறுவது நியூஸ் 18 ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உடல் எடை குறைப்பு உள்ளிட்ட அழகுக் குறிப்புகளை வழங்க ஆயிரக்கணக்கான இணையதளங்கள், ஆன்லைன் பக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சரியான முறையில் பல தளங்கள், இயங்கினாலும், மோசடிக்காகவே சிலவை இருக்கின்றன. அந்த வகையில், பேஸ்புக்கில் அனிஷ் ஷா என்ற பெயரில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை DP-யாக கொண்டு ஒரு பக்கம் உள்ளது.
இந்த பக்கத்தில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகளை பதிவிடுவது வழக்கம்.

இதை பார்க்கும் இளம் பெண்கள், திருமணம் ஆன பெண்களும் Like செய்து அவரின் நட்பு வட்டத்தில் வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இந்த பக்கத்தில் உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்க எளிய வழிகள் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் கணக்கு


இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் எப்படி உடல் எடையை குறைப்பது?  என்று பதில் கேட்டுள்ளனர். உடனே இன்பாக்ஸ் வாருங்கள் என்று உங்களுக்கான விடை உள்ளது என்று பதில் கிடைத்துள்ளது. இதை நம்பிய பெண்கள் அந்த கணக்கிற்கு மெசேஜ்  செய்துள்ளனர்.

இதில் தொடர்பு கொண்ட பெண்களுக்கு பயிற்ச்சிக்காக கட்டணம் ஆயிரம் முதல் மூவாயிரம் வரை இருக்கும் என்றும், வாட்ஸப்  மூலமாக பயிற்சி கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

Also read... எம்ஜிஆராக - விஜய், ஜெயலலிதாவாக - சங்கீதா... மதுரையில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்

மேலும் அனைவருக்கும் ஒரு வாட்ஸப் எண்ணை கொடுத்து மெசேஜ் செய்யும்படி கூறியுள்ளனர். இப்படி பெண்களின் ஆசையை படிப்படியாக அதிகரித்துள்ளது அந்த கும்பல், தங்களுக்கு மெசேஜ் செய்யும் பெண்களை, முதலில் உடல் எடை எங்களுக்கு தெரிய உங்கள் முழு புகைப்படத்தை அனுப்புங்கள் என்று சொல்லியுள்ளனர்.



தொடர்ந்து பேசி உங்கள் வீடியோவை அனுப்புங்கள் என்றும், ஆடை இல்லாமல் புகைப்படம் வேண்டும் என்றும் சொல்ல, பேச்சில் மயங்கிய பெண்கள் அதையும் அனுப்பியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் பெண்களின் அந்தரங்க புகைப்படம் வரை பெற்ற உடன், வீடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளனர். போலீஸில் புகார் தெரிவிப்பேன் என்று சிலர் தெரிவித்தவுடன் தற்போது அந்த பேஸ்புக் பக்கத்தில் இருந்த பதிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் அந்த வாட்ஸப் எண் இயங்கி வருகின்றது.
இது போன்று மையங்களை அனுக விரும்பும் அனைவரும் அரசு பதிவு பெற்ற பயிற்சி மையங்களா? என்று பார்த்து சேர வேண்டும்.
இது போன்ற புகார்களை பெண்கள் பயம் இல்லாமல் ஆன்லைன் மூலமாக கொடுக்கலாம். அவர்களின் அடையாளங்கள் காப்பாற்றப்படும் என்று கூறுகின்றனர் காவல்துறையினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: