வேலூரில் 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ் கிடைக்கும் என்று விளம்பரம் செய்த இடைத்தரகர் குறித்த செய்தியை நியூஸ்18 தமிழ்நாடு ஆதாரத்துடன் வெளியிட்டது. பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அவர்களின் கவனத்துக்கு இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, இ பாஸ் தற்போது எளிமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ பாஸ் வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றும் இடைத்தரகர்கள் சீட்டிங், போர்ஜெரி, உள்ளிட்ட வழக்கில் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றார்.
மேலும், நியூஸ்18 வெளியிட்ட தகவல் அடிப்படையில் இடைத்தரகர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் என விளம்பரம் செய்த ஜெகதீஷ் குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.