நியூஸ்18 செய்தி எதிரொலி: ஊரடங்கால் தவித்த நரிக்குறவர்களுக்கு குவியும் உதவிகள்!

நியூஸ்18 செய்தி எதிரொலி: ஊரடங்கால் தவித்த நரிக்குறவர்களுக்கு குவியும் உதவிகள்!
நரிக்குறவர்கள் (கோப்புப் படம்)
  • Share this:
நியூஸ் 18 செய்தி எதிரொலியாக, சென்னையின் பல்வேறு இடங்களில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சென்னையின் மப்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நரிக்குறவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நரிக்குறவர்களுக்கு உணவு மற்றும் குழந்தைகளுக்குப் பால் இன்றி அவர்கள் தவிப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் பிரத்யேக செய்தித் தொகுப்பு வெளியானது.

இதையடுத்து, அவர்களுக்கு உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள், விஜய் ரசிகர் மன்றம் ஆகியோர் சார்பில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


 

Also read: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள்... அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிப்பு!

மேலும் அவர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்குவதாக ஊராட்சி அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். மாநகராட்சி சார்பில் அவர்கள் வசிக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.Also see:











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading