News18 Impact: pm-kisan செயலியில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவிப்பு - வேளாண் இணை இயக்குனர் பதில்!
News18 Impact: pm-kisan செயலியில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவிப்பு - வேளாண் இணை இயக்குனர் பதில்!
pm-kisan
News18 Impact : பிரதமரின் கிசான் (Pradhan Mantri Kisan Samman Nidhi)திட்டத்தில் புதிய விவசாயிகள் இந்தாண்டு பதிவு செய்ய முடியாமல் தவித்து வந்தனர். நியூஸ்18 செய்தி எதிரொலியாக இது குறித்து கடலூர் வேளாண் இணை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மொத்தம் 3 தவணைகளாக ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.
இதனிடையே பிரதமரின் கிசான் (Pradhan Mantri Kisan Samman Nidhi)திட்டத்தில் புதிய விவசாயிகள் இந்தாண்டு பதிவு செய்ய முடியாமல் தவித்து வந்தனர். pm-kisan என்ற தொலைபேசி செயலி மூலமாக புதிய விவசாயிகள் ஆதார் எண் மூலம் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்காலிகமாக புதிய விவசாயிகள் இந்த செயலி முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு pm-kisan திட்டத்தில் போலியாக விவசாயிகள் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தால் pm-kisan திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து நியூஸ்18 தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடலூர் வேளாண் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அதில், கடலூர் மாவட்டத்தில் pm-kisan திட்டத்தில் புதிய விவசாயிகள் சேர இணையதளம் மூலம் பதிவு செய்யும் பொழுது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக வரவும் என கூறியுள்ளார்.
மேலும் இத்திட்டத்தில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 816 விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த முறை வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே பிரதமரின் pm-kisan திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 2000 ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இணைக்கவில்லை எனில் பணம் வராது என தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரத்து 958 நபர்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்காமல் உள்ளனர். எனவே இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடலூர் செய்தியாளர் : பிரேம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.