• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ் 18 செய்தி எதிரொலி: ஆசிரியர்களின் விவரங்களை கேட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு.. இணை இயக்குநர் இடமாற்றம்!

நியூஸ் 18 செய்தி எதிரொலி: ஆசிரியர்களின் விவரங்களை கேட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு.. இணை இயக்குநர் இடமாற்றம்!

நியூஸ் 18 செய்தி எதிரொலி: புதிய கல்வி கொள்கைப்படி ஆசிரியர்களின் விவரங்களை கேட்ட இணை இயக்குநர் இடமாற்றம்!

நியூஸ் 18 செய்தி எதிரொலி: புதிய கல்வி கொள்கைப்படி ஆசிரியர்களின் விவரங்களை கேட்ட இணை இயக்குநர் இடமாற்றம்!

புதிய கல்வி கொள்கைப்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சார பயிற்சி வழங்க விவரங்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில், நியூஸ் 18 செய்தி எதிரொலியாக அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  • Share this:
    புதிய கல்விக் கொள்கையை, எதிர்க்கட்சியாக இருந்த போதிலிருந்தே திமுக எதிர்த்து வருகிறது. இக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழ்நாட்டில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சார பயிற்சி வழங்க விவரங்களை அனுப்பிடுமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.

    அரசின் கொள்கைக்கும், சுற்றறிக்கையும் இடையே உள்ள முரண் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின்னர் இவ்விவகாரம் சர்ச்சையான சூழலில் மதுரையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, மத்திய கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் இருந்து வந்த மின்னஞ்சலுக்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் இணை இயக்குனர் பதில் அளித்ததால் இந்த சர்ச்சை ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.

    கலை மற்றும் கலாச்சார பயிற்சிக்கு ஆசிரியர்களின் விவரங்களை கேட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக கூறிய அமைச்சர், அஜாக்ரதையாக செயல்பட்ட இணை இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தங்களுக்கு ஒருபாடம் எனக்கூறிய அமைச்சர், இனி எந்த சுற்றறிக்கையாக இருந்தாலும் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுப்பப்படும் என்றார். இல்லம் தேடி கல்வி திட்டம் பற்றி, திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாக கூறிய அமைச்சர், 4 அடுக்குகள் கொண்டு ஆராய்ந்த பின்னரே தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்போம் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: