Home /News /tamil-nadu /

நியூஸ்18செய்தி எதிரொலி: சிறுமி டான்யாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் வருகை

நியூஸ்18செய்தி எதிரொலி: சிறுமி டான்யாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் வருகை

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

Tanya treatment : சிறுமி டான்யாவிற்கு ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அதி நவீன ஒட்டுறுப்பு சிகிச்சை நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur | Tamil Nadu
    அரியவகை முகச் சிதைவு நோயால் அவதியுறும் சிறுமி டான்யாவிற்கு வரும் செவ்வாய்கிழமை 2 ஜெர்மன் மருத்துவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் 8 மணி நேர உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.

    பேரி ராம்பெர்க் ஹெமி பேசியல் அட்ராப்பி (Parry Romberg Syndrome Hemifacial atrophy)என்னும் அறிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வரும் செவ்வாய்கிழமை 2 ஜெர்மன் மருத்துவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் 8 மணி நேர உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி டான்யா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை நியூஸ் 18 தமிழ்நாடு சிறப்பு செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட மாவட்ட மருத்துவ குழுவினர் நேரில் வந்து குழந்தை டான்யாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    உடனடியாக டான்யா  தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் உள் நோயாளியாக  கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டார். CTமற்றும் MRI ஸ்கேன் மற்றும் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

    சிறுமி டான்யா


    இந்த நிலையில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்  தொடர்ந்து 3 நாட்களாக நேரில் சந்தித்த நிலையில். வரும் செவ்வாய்க்கிழமை காலை ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அதி நவீன (Plastic Reconstructive Surgery with Advanced micro surgical and cranio facial techniques multiple stage of treatment. என்று சொல்லக்கூடிய உடல் micro surgical ஒட்டுறுப்பு சிகிச்சை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Germany, News18 Impact, Thiruvallur

    அடுத்த செய்தி