• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ்18 செய்தி எதிரொலி: பதவி உயர்வுக்கான தேர்வை ஒரே தேர்வு மையத்தில் எழுத அனுமதி!

நியூஸ்18 செய்தி எதிரொலி: பதவி உயர்வுக்கான தேர்வை ஒரே தேர்வு மையத்தில் எழுத அனுமதி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நியூஸ்18 செய்தி எதிரொலியாக அரசு துறை ரீதியான பதிவு உயர்வுக்கான தேர்வை ஒரே தேர்வு மையத்தில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
வரும் 16ந்தேதி தமிழகத்தில் தொடங்கவுள்ள அரசு துறை ரீதியான பதிவு உயர்வுக்கான தேர்வில் காலையில் ஒரு தேர்வு மையம், மதியம் ஒரு தேர்வு மையம் என ஒரு நாளில் தேர்வு எழுதும் படி தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இரு தேர்வு மையங்களுக்கு இடையே 70 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு வழக்கம் போல ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்த செய்தி நியூஸ் 18 ல் வெளியானதைத் தொடர்ந்து  டிஎன்பிஎஸ்சி ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்களுக்கு புதிய ஹால் டிக்கெட்டும் வழங்கியுள்ளது.

Also read: காலை ஒரு சென்டர், மதியம் ஒரு சென்டர்... 70 கிமீ தூரம் எப்படி செல்வது? தவிப்பில் தேர்வர்கள்

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்வும் வரும் 16ந்தேதி முதல் 23ந்தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெறவுள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என தேர்வு எழுதும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையி;ல நேற்று தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. இதில் காலையில்  ஒரு தேர்வு மையமும், மாலை மற்றொரு தேர்வு மையமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தேர்வு மையங்களுக்கு இடையே 70 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை தொலைவு உள்ளதால் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்வு எழுதுபவர்கள் தெரிவித்து இருந்தனர்.

காலை 9.30மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம். 12.30 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகும் மாலை நடைபெறும் தேர்வு 1.30மணிக்கு தொடங்குவதால் 1 மணிநேரத்தில் தேர்வு மையத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் தேர்வு மையத்திற்கு அவசர அசவரமாக செல்ல வேண்டி நிலை ஏற்படுவது மட்டுமின்றி, மன ரீதியாக பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், மேலும் பெண் தேர்வாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருப்பதால், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்ணை தொடர்பு கொண்டால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்தது.

இப்பிரச்சினை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கமும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த செய்தி நியூஸ் 18ல் வெளியானதைத் தொடர்ந்து டிஎன்பிசி நிர்வாகம், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்களுக்கு. புதிய ஹால் டிக்கெட்டும் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: