நியூஸ்18 செய்தி எதிரொலி: பூடான் செல்லும் வீரர்களுக்கு நிதியுதவி!

நீயூஸ்18 செய்தி எதிரொலி: பூடான் செல்லும் வீரர்களுக்கு நிதியுதவி!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் அருண், தடகள வீரர் சரவணகுமார் இருவரையும் நேரில் அழைத்த  மாவட்ட ஆட்சியர் சிவராசு தனது நிதியில் இருந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். 

  • Share this:
பூடானில் அடுத்த மாதம் 7- 9ம் தேதிகளில் நடைபெறும் தெற்காசிய இளைஞர் ஊரக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியும், பண வசதியின்றி தவிக்கும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், சரவணகுமார்,  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர்  திருச்சி மாவட்ட ஆட்சியர் சந்தித்து நேற்று உதவி கேட்டனர். இது குறித்த செய்தி நீயூஸ் 18 தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் அருண், தடகள வீரர் சரவணகுமார் இருவரையும் நேரில் அழைத்த  மாவட்ட ஆட்சியர் சிவராசு தனது நிதியில் இருந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர்  பேட்ரிக் ராஜ்குமார் என்பவர் ₹ 40,000 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும் சிலர் உதவி அளிப்பதாக உறுயளித்துள்ளனர்.

இதையடுத்து பூடான் செல்வது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது மூவரும் பூடானில் நடைபெறும் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

Also read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

மேலும், பூடானில் நடைபெறும் தெற்காசிய ஊரக இளைஞர்  விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஒலிம்பிக் சங்க அங்கீகாரம் பெறாமல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்போரின் சான்றிதழ் அரசு சார்ந்த பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படாது.  ஆகையால், அரசு நேரடியாக உதவு வாய்ப்பில்லை என்கின்றனர்.

அதேநேரத்தில், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் உதவியுள்ளது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நேபாளத்திற்கு சென்ற போதும் திருச்சி தொழிலதிபர் வீரசக்தி (மநீம திருச்சி கிழக்கு வேட்பாளர்) நிதியுதவி செய்துள்ளார். ஆகையால்,  தனியார் நிதியுதவியை வீரர்கள் மூவரும் கோரியுள்ளனர்.

 
Published by:Esakki Raja
First published: