தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்ததற்கு இபிஎஸ்-ஸின் செயல்பாடுகளே காரணம் என்று குற்றம்சாட்டி அதிமுக தொண்டர்கள் பெயரில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் குறித்து முன்னணி நாளிதழ்களில் அதிமுக-வின் விசுவாசமிக்க தொண்டர்கள் என்ற பெயரில் இரண்டு பக்கத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஓ. பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில், திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மாபெரும் மூன்று பொதுக்கூட்டங்களை நடத்திக் காட்டியதாகவும் 2011-ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்கு கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, வேட்பாளர்களை நியமிப்பது போன்றவற்றற்றில் ஜெயலலிதா வகுத்த வியூகங்களில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய தளபதியாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் அதிகாரம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவினரால் மிகப் பெரிய சூழ்ச்சிகள் கட்டவிழ்க்கப்பட்டிருப்பதாகவும்,தமிழகம் முழுவதும் உள்ளடி வேலைகளை செய்து ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசிகளை கட்சியை விட்டு ஓரங்கட்டியுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒற்றை தலைமை.. நான் கூறியது சிதம்பர ரகசியம் அல்ல: ஜெயக்குமார்
10 புள்ளி 5 சதவிகித இடஒதுக்கீட்டில் சட்டவிதிகளை பின்பற்றாமல் அவசரத்தில் செயல்பட்ட காரணத்தால் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்விபெறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இயற்கையாகவே மக்கள் செல்வாக்குடன் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிலைப்படுத்தாமல் உதாசீனப்படுத்தியதே தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்ததற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய் பிறந்தநாளையொட்டி 365 நாட்களும் நலத்திட்ட உதவிகள்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் சுதந்திரமாக செயல்பட ஏன் அனுமதிக்கவில்லை என்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஓ.பன்னீர்செல்வம் கூறிய வியூகங்களை ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அங்கீகாரம் வழங்கிய பிறகு அவரது செயலபாடுகள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi palanisamy, O Panneerselvam