#Exclusive | சென்னையில் ஊரடங்கிலும் சத்தமில்லாமல் நடக்கும் மது விற்பனை - தடுக்குமா அரசு?

சென்னையில் கொரோனா ஒருபுறம் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் சூழலிலும், சத்தமில்லாமல் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது மது விற்பனையும், அது சார்ந்த குற்றங்களும்

#Exclusive | சென்னையில் ஊரடங்கிலும் சத்தமில்லாமல் நடக்கும் மது விற்பனை - தடுக்குமா அரசு?
(கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக இயங்காத நிலையிலும், பல மடங்கு கொள்ளை லாபத்துடன் மது விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து நியூஸ் 18 நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 முதல் அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

இதனால், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இயங்கும் சில கடைகளில் இருந்து சென்னைக்கு மது பாட்டில் கடத்தல் நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், நியூஸ் 18 நடத்திய ஆய்வில் சென்னையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது அம்பலமாகி உள்ள அதே நேரத்தில், மது குடிப்போரிடம் பணம் பறிக்கும் ஏமாற்று வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக மது வாங்கும் ஆர்வத்தில் பணத்தை இழந்த நபர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) கூறுகையில்,
"என் நண்பர் மூலம் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டேன். அவருக்கு நம்பகமான ஒருவரின் பெயரை சொன்ன பின், என்ன மது வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.900 ரூபாய் பாட்டில் மதுவை, 3000 ரூபாய் என்றார்.
Google pay வழியாக 1000 ரூபாயை முன்பனமாக அனுப்ப சொன்னார். பின்னர், நேரில் மது பெற்றுக் கொள்ளும் போது மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என்றார்.

முதல் தடவை மது கேட்ட போது, முதலில் மதுரவாயல் அருகே வர சொன்னார். பின், வைஷ்ணவ கல்லூரி அருகே வர சொல்லி, மீதி பணத்தை பெற்றுக் கொண்டு, மதுவை கொடுத்து விட்டு சென்றார்.
அதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து மீண்டும் மது கேட்ட போது, அதே போல 1000 ரூபாயை அனுப்ப சொன்னார்.

அனுப்பிய பின்னர், எனக்கு மதுவும் கொடுக்கவில்லை, பணமும் கொடுக்கவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் பணம் கிடைக்கவில்லை" என்றார்.

மேலும், "வெளி மாவட்டங்களில் இருந்து கடத்தி வந்து, சென்னை முழுவதும் சப்ளை நடக்கிறது. அவர்களிடம் அனைத்து உயர்ரக மது வகைகளும் உள்ளன. மதுரவாயல் அருகே ஒரு ஓட்டலில் தான் பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள்" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இவர் மூலம் சட்ட விரோதமாக மது விற்கும் கௌரவ் என்ற நபரின் எண்ணில் தொடர்பு கொண்ட போது சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

Also read... உங்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கனுமா? அசத்தல் ஐடியா கொடுத்த அமைச்சர்

ஊரடங்கு காலத்தில் பல நாட்களாகவே மது விற்பனை செய்து கொண்டிருப்பதாகவும், தனக்கு தினமும் மது கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ஊரடங்கு என்பதாலேயே விலை அதிகம் உள்ளதாக கூறியவர், என்ன மது வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் கொண்டு வந்து தருவோம். மதுவை பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தால் போதும் என தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா ஒருபுறம் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் சூழலிலும், சத்தமில்லாமல் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது மது விற்பனையும், அது சார்ந்த குற்றங்களும். உடனடியாக நடவடிக்கை எடுக்குமா அரசு...?
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading