EXCLUSIVE பழங்குடியினர் பட்டா மனுக்கள் சட்டவிரோதமாக நிராகரிப்பு: RTI தகவல்

தமிழகம் உட்பட 16 மாநிலங்களைச் சேர்த்து 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சதீஷ் லக்‌ஷ்மணன் | news18
Updated: August 6, 2019, 5:45 PM IST
EXCLUSIVE பழங்குடியினர் பட்டா மனுக்கள் சட்டவிரோதமாக நிராகரிப்பு: RTI தகவல்
பழங்குடியினர் பட்டா மனு நிராகரிப்பு
சதீஷ் லக்‌ஷ்மணன் | news18
Updated: August 6, 2019, 5:45 PM IST
தமிழ்நாட்டில் 10,656 பழங்குடியினரின் பட்டா மனுக்களை  தமிழக அரசு உரிய விதிகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக நிராகரித்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நியூஸ் 18 தமிழ்நாடு பெற்றுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்ட வன உரிமைச்சட்டத்தின்படி, வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு அந்தந்த நிலங்களை பட்டாவாக வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இச்சட்டத்தின் மூலம் காடுகளில் அழிவு ஏற்படும் எனக்கூறிய Wildlife first என்ற அமைப்பு, பட்டா இல்லாமல் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கூறி கடந்த 2008-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,

16 மாநிலங்கள் தங்கள் வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா மனுக்களின் எண்ணிக்கை மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தன.

இதில் தமிழகம் உட்பட 16 மாநிலங்களைச் சேர்த்து 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Loading...

இதையடுத்து பட்டா மனு நிராகரிக்கப்பட்ட பழங்குடியினரை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மாநில அரசு தொடங்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்தது.

இதைத்தொடர்ந்து பழங்குடிகள் விவகார அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அரசு 10,656 பழங்குடியினரின் பட்டா மனுக்களை நிராகரித்திருப்பதாகவும்,

இதற்கான காரணத்தை மனு அளித்த பழங்குடியினர்களுக்கு எழுத்துப் பூர்வமாக அளிக்கவில்லை என்றும் கூறி தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளது.

எழுத்து பூர்வ கடிதம் கிடைத்தால் 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என வாய்ப்பு இருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் தவறால் அந்த வாய்ப்பையும் பழங்குடியினர் இழந்துள்ளனர்.

இந்த தகவலை தற்போது ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நியூஸ் 18 தமிழ்நாடு பெற்றுள்ளது.

இதனிடையே முறையான விதிகளை பின்பற்றாமல் பட்டா மனுக்களை நிராகரித்ததாக கூறி தன் தவறை ஒப்புக்கொண்டுள்ள தமிழக அரசு, ஆறு மாத காலத்திற்குள் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலிக்கவுள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியுள்ளது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்கள் அளித்த 1272 பட்டா மனுக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகிறார் மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த லட்சுமண ராஜா

இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் வன உரிமைச் சட்டத்தின் விதிகளில் கூறியுள்ளதுபடி முறையாக பட்டா மனுக்களை பரிசீலிக்க அரசு முன்வர வேண்டும் எனக் கூறுகிறார் கூடலூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின செயற்பாட்டாளர் செல்வராஜ்

ஆதியிலிருந்தே காட்டின் ஒரு அங்கமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை பாதுகாத்தால் மட்டுமே காடு மற்றும் காட்டுயிர் குறித்த பாரம்பரிய அறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் தமிழக அரசு உடனடியாக நிராகரிக்கப்பட்ட பழங்குடிகளின் பட்டா மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...