டிவிட்டர் சமூகவலைதளத்தில் அன்றைய நாளின் முக்கியமான, பிரபலமான விவாதப் பொருள்களின் பட்டியல், டிரெண்டிங் லிஸ்ட் ஆக வெளியிடப்பட்டு வருகிறது. அது அரசியல், சினிமா, கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு என பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் தொடர்புடையதாக இருக்கும். டிவிட்டர் பதிவுகளுக்கு பயனர்கள் ஆற்றும் வினையைப் பொருத்து ஒன்று, இரண்டு என டிரெண்டிங் பட்டியல் வெளியாகி வருகிறது.
அவ்வகையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்பான ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆயிற்று. செய்திகளை துரிதமாகவும், துல்லியமாகவும் துடிப்பு குறையாமலும் வழங்கி வரும் நியூஸ் 18 தொலைக்காட்சி, பொங்கல் திருநாள் முதல் மேலும் தோற்றப்பொலிவுடனும் கூடுதல் செய்திநேரத்துடனும் புதிய அவதாரமெடுத்தது. அதற்கு டிவிட்டரில் நேயர்கள் பெரிதும் ஆதரவு அளித்து வினையாற்றியதால் தேசிய அளவில் #News18TNnewlook என்ற ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனது.
இந்தியா மற்றும் விராட் கோலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக News18TNnewlook ஹேஷ் டேக் தேசிய அளவில் மூன்றாமிடத்தில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பார்வையாளர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News 18, News18 Tamil Nadu, Trending