• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ்18-ல் வெளிவந்த ரேஷன் அட்டை செய்தி - உண்மை என்ன?

நியூஸ்18-ல் வெளிவந்த ரேஷன் அட்டை செய்தி - உண்மை என்ன?

ரேஷன் அட்டை

ரேஷன் அட்டை

ரேஷன் கார்டு தொடர்பாக கடந்த 2017-ம் வெளியான செய்தியை தற்போது ஷேர் செய்து குழப்பத்தை உருவாக்க வேண்டாம்.

  • Share this:
    தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டு வருமானம் அதிகம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டதாக இணையத்தில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த செய்தி 2017-ம் ஆண்டு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து வெளியானது என்பது தான் உண்மை.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது. அதில், ரே‌ஷன் பொருட்கள் யார், யாருக்கு வழங்க வேண்டும், யார், யாருக்கு வழங்கப்பட வேண்டியதில்லை என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது. அதில் அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டு வருமானம் அதிகம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது ரே‌ஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த சட்டத்தை பின்பற்றி ரே‌ஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பாக தமிழக அரசு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள்–2017 என்று உருவாக்கி அதை அரசிதழில் கடந்த 2017 ஜூலை 5–ந் தேதி வெளியிட்டது.



    இந்த தகவலின் அடிப்படையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ரேஷன் பொருட்கள் யாருக்கு வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தது.

    இதுதொடர்பாக அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவுத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். ”மத்திய அரசு கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தோம். அதன்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வராது. ரே‌ஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றி தமிழக அரசு கொண்டு வந்துள்ள விதிகளை அரசிதழில் வெளியிடுவது என்பது ஒரு நடைமுறை தான். ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் மாற்றம் இல்லை. தொடர்ந்து பொது வினியோக திட்டத்தை மக்கள் நலன்கருதி ஏற்கனவே இருந்த முறைப்படி தமிழக அரசு செயல்படுத்தும்” என்று தெளிவுபடுத்தினர்.

    எனவே நியூஸ் தமிழ்நாடு 2017-ம் ஆண்டு வெளியிட்ட ரேஷன் கார்டு தொடர்பான செய்தியை சிலர் தற்போது பகிர்ந்து வருகின்றனர். அப்போதைய அரசு தெளிவாக விளக்கியதை போலவே, இன்றும் பழைய நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    அந்த செய்தி பழையது என்பதாலும், அதையடுத்து, அரசு தெளிவுப்படுத்தியிருந்ததாலும், இனியும் அந்த செய்தியை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து தேவையில்லாத குழப்பத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: