Home /News /tamil-nadu /

நியூஸ் 18 செய்தி எதிரொலி - வக்பு வாரிய சொத்துக்களை மறு நில அளவை செய்யக்கோரி சி.இ.ஓ கடிதம்

நியூஸ் 18 செய்தி எதிரொலி - வக்பு வாரிய சொத்துக்களை மறு நில அளவை செய்யக்கோரி சி.இ.ஓ கடிதம்

வக்பு வாரியம் அறிவிப்பு

வக்பு வாரியம் அறிவிப்பு

வக்பு வாரிய சொத்துக்களை மறு நில அளவை செய்யக்கோரி வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக வக்பு வாரிய சொத்துக்களை மறு நில அளவை செய்யக்கோரி வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு உரிமையான சொத்துக்கள் தொடர்பாக 250 பக்க கடிதம் ஒன்றை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா அனுப்பியிருந்தார். அதில், திருச்சி மாவட்டம் முழுவதும் 12 கிராமங்கள் முழுமையாக வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால், திருச்செந்துறை உட்பட 12 கிராமங்களில் உள்ள சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர்கள் மறுத்தனர். இது குறித்து நியூஸ் 18 தொலைக் காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, ஆட்சியர் பிரதீப் குமார் முழு கிராமங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த வக்பு வாரிய சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    இந்நிலையில், வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா, தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், வக்பு வாரிய சொத்துக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததில் சில கிராமங்களும் முழுமையாக இடம் பெற்றிருந்தன. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் எழுந்ததால், வக்பு வாரிய சொத்துக்களை மறு நில அளவை செய்ய சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி